தரக்குறைவாக பேசிய டிக் டாக் சூர்யாதேவி… காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி : தட்டித் தூக்கிய போலீஸ்!!

594

திருச்சி..

பெட்ரோலை உடம்பில் ஊற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் டிக் டாக் பிரபலம் திருச்சி சூர்யா தேவி. தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் காவலர் லாரன்ஸ் மேரி அளித்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல்துறையினர் சூர்யாதேவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் மருதுபாண்டி. இவர் மனைவி சூர்யா தேவி, இவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு டிக்டாக்கில் பிரபலமானவர்.

திரைப் பிரபலங்கள், சமூக வலைத்தளப் பிரபலங்கங்களை கடுமையாகவும், தவறாகவும் விமர்சனம் செய்து டிக்டாக், யூடியூப்பில் பதிவிட்டு வந்தார். இவரின் செயல்களை இணைய வாசிகள் கிண்டலடித்தனர்.


கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுனின் போது வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வனிதாவுக்கு எதிராக சூர்யாதேவி எனும் டிக்டாக் பிரபலம் களத்தில் இறங்கினார்.

அது போல் வனிதாவுக்கு ஆதரவாக ரவுடி பேபி சூர்யா பேசி வந்தார். இந்த நிலையில் சூர்யாதேவி, வனிதாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைப்பாடினார். இதற்கு வனிதா பதிலடி கொடுத்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையால் காவல்நிலையம் வரை சென்று வந்தார் சூர்யா தேவி.

மற்றொரு டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவுடன் சண்டை போட்டார். அந்த சண்டை சமூக வலைத்தளங்களில் வைரலானது. மணப்பாறை சூர்யாதேவிக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.

கடந்த 21 ஆம் தேதி மணப்பாறை காவல்நிலையத்தில் தனது கணவரும், அவரின் சகோதரரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மறுபுறம் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை தனது தம்பி தேவா மற்றும் கணவர் மருதுபாண்டி ஆகியோர் தன்னை தலையில் அடித்து காயப்படுத்தியதாக மணப்பாறை காவல் நிலையத்தில் சூர்யா தேவி புகார் அளித்தார்.

புகாரின்பேரில் விசாரணைக்காக வியாழக்கிழமை இருத்தரப்பினரும் காவல்நிலையத்தில் ஆஜரானபோது, மதுபோதையில் வந்திருந்த சூர்யாதேவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சென்று விட்டார்.

இந்நிலையில் தான் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் வந்த சூர்யாதேவி காவல்நிலையம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அவர் மேல் தண்ணீர் ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.

சூர்யாதேவி கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் புகாருக்கு மனு ரசீது கொடுத்துள்ளனர்.

ஆனாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத சூர்யாதேவி காவல்நிலையம் முன்பே காவல்துறையினரை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் சூர்யாதேவி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர்.