திருடனைப் பிடிக்கச் சென்றபோது பழக்கம்.. ஹோட்டலில் செல்போன் திருடனுடன் சிக்கிய பெண் போலீஸ் அதிகாரி!!

561

மும்பையில்..

மும்பை புறநகர் ரயிலில் தினமும் ஏராளமான மொபைல் போன் திருட்டு நடந்துகொண்டிருக்கிறது. மும்பை கேர்வாடி போலீஸார் அது போன்ற ஒரு மொபைல் போன் திருடனை தேடிக்கொண்டிருந்தனர். ச

பீர் அலி என்ற அந்தத் திருடன் மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள மும்ப்ரா என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அவரைக் கைதுசெய்ய உதவும்படி மும்ப்ரா போலீஸ் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருபாலியிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் தான் விடுமுறையில் செல்வதால், சில நாள்கள் பொறுக்கும்படி கேர்வாடி போலீஸாரிடம் கிருபாலி கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, மொபைல் திருடன் சபீர் அலி அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மொபைல் நம்பர் கேர்வாடி போலீஸாருக்குக் கிடைத்தது. உடனே அந்த போனைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.


அவன் யாருக்கெல்லாம் போன் செய்திருக்கிறான் என்ற விவரத்தைப் பார்த்தனர். இரண்டு மாதத்தில் ஒரே நம்பரில் 100 முறைக்கும் மேல் சபீர் அலி பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த போன் நம்பர் போலீஸ் அதிகாரி கிருபாலிக்குச் சொந்தமானது என்று கண்டுபிடித்த போலீஸார் இரண்டு பேரையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீர் அலி நள்ளிரவில் நவிமும்பையிலிருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டிருப்பதை போலீஸார் கண்காணித்தனர்.

அவனை போலீஸார் பின்தொடர்ந்தனர். கோரேகாவ் ஆரேகாலனி அருகே சென்றபோது சபீர் அலி தனது மொபைல் போனை ஆஃப் செய்துவிட்டான். உடனே கிருபாலியின் போன் எங்கிருக்கிறது என்று பார்த்தபோது அவரும் அதே பகுதியில்தான் இருந்தார்.

அவர்கள் பவாய் பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, சபீர் அலியும் கிருபாலியும் உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. அவர்கள் இரண்டு பேரும் காலை 6 மணிக்கு வெளியில் வந்தனர். உடனே சபீர் அலியை போலீஸார் கைதுசெய்தனர்.

அவனிடமிருந்து ஒன்பது மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இந்த மாதம் 8-ம் தேதி நடந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி மும்ப்ராவைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் கிருபாலிக்கும் சபீர் அலிக்கும் தொடர்பு இருப்பதாகவும்,

அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுவரை போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுத்ததாகத் தகவல் எதுவும் இல்லை. அது பற்றி விசாரிக்க தனி அதிகாரியை தானே கமிஷனர் ஜெய்ஜீத் சிங் நியமித்திருக்கிறார்.