திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர்!!

8653

சென்னையில்..

சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகர், கக்கன் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் செல்வநாதன். இவருக்கு வயது 24. இவர் டிப்ளமோ படித்துவிட்டு எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக தனது மாமன் மகளை காதலித்து வந்துள்ளார்.

அவரையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என பெற்றோரிடம் நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளார். ஆனால் இதற்கு இளைஞரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அத்துடன் நில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவசர, அவசரமாக பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

’’மாமன் மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன், வேறிடத்தில் பெண் பார்க்கவேண்டாம்’’ என பெற்றோரிடம் கெஞ்சி கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த செல்வநாதன், நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறித் துடித்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் செல்வநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.