
1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் ‘புது நெல்லு புது நாத்து’ திரை ப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘சின்ன கவுண்டர்’, ‘திருமதி பழனிசாமி’, ‘இளவரன்’, ‘இந்தியன்’ உள்பட 50திற்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் சுகன்யா.

கிட்ட த்தட்ட எல்லா முன்னணி ஹீரோக் களோடும் அதாவது கமல், சத்யராஜ், கார்த்திக், சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் படு பிஸியாக நடித்து வந்த இவர் நடுவில் காணாமல் போய்விட்டார்.தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் வருகிறார்.

2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஓராண்டிலேயே கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றார். தற்போது குழந்தையும் இல்லாமல் தனிமையில் குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் துவங்கி வைத்த்தார். 200 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பப்பட்டது.
Jai Shri Ram ??⛳️Lets meditate on ShriRam?? pic.twitter.com/bORpXUIMmP
— sukanya (@SukanyaActor) August 5, 2020
நடிகை சுகன்யா ராமர் பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் அவரது நெற்றியில் ராமரின் திருவுருவத்தை வரைந்துள்ளார். அது டேட்டூவாக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.















