திருமணமாகி வெறும் 13 நாட்களே!.. மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுப்பெண் திடீர் மரணம்!!

1036

தமிழகத்தில் திருமணமான 13 நாளில் புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37), அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் கனிமொழி என்பவருக்கும் கடந்த 5ம் திகதி திருமணம் நடந்து முடிந்தது.

சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் நேற்று முன்தினம் அரப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.


அப்போது திடீரென கனிமொழி மயங்கி விழ, உடனடியாக அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கனிமொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயினர், இந்நிலையில் ரத்தினகிரி பொலிசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.