திருமணமான 20 வயது மகள் இறந்துவிட்டதாக தந்தைக்கு வந்த தகவல்! மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

536

இந்தியாவில் இளம்பெண்ணையும், அவரின் கைகுழந்தையையும் கொலை செய்து உடலை எரித்த கணவர் மற்றும் குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் ராகினி (20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஐந்து மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராகினி மற்றும் அவர் குழந்தையை ராகேஷ் மற்றும் அவர் குடும்பத்தார் கொன்று உடலை எரித்துவிட்டதாக ராகினி தந்தை வீரேந்திரா பொலிசில் புகார் கொடுத்தார்.

புகாரையடுத்து பொலிசார் ராகேஷை கைது செய்துள்ளனர். மேலும் அவரின் தாயார் மீனா தேவி, சகோதரர் சுனில் மற்றும் சகோதரி ஜோதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து வீரேந்திரா கூறுகையில், திருமணமான நாள் முதலே என் மகள் ராகினியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் கேட்டு அவர் கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்தனர்.

கடந்த சனிக்கிழமை எனக்கு ராகேஷின் சகோதரி போன் செய்து, ராகினியும் அவர் குழந்தையும் கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்து நான் வரும் வரை சடலத்தை எதுவும் செய்ய வேண்டாம் என அழுதபடி கூறிவிட்டு உடனடியாக அங்கு சென்றேன்.

ஆனால் அங்கு இருவரின் சடலமும் இல்லாதது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது, பின்னர் தான் ராகினி மற்றும் குழந்தையை கொன்றுவிட்டு சடலத்தை அவர்கள் எரித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் எரிக்கப்பட்ட சடலத்தை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.