கர்நாடகா..

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்கு உட்பட்ட எம்.வி. லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் மகேஸ்வரா(24). இவருக்கும் மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த கவனாவுக்கும்(21) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில், மகேஸ்வராவை மதிக்காமல் பேசி, அவருக்கு மனைவி கவனா தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேஸ்வரா வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையத்து இந்த சம்பவம் குறித்து ஞானபாரதி காவல் நிலையத்தில் மகேஸ்வராவின் தாய் ரத்னம்மா புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தனது மகனுடன் கவனா அடிக்கடி சண்டை போட்டு, தகாத வார்த்தையில் திட்டி யாருக்கும் மதிப்பளிக்காமல் பேசுவதாகவும், நகை வாங்கி கொடுக்கும்படி மகனிடம் கேட்டு தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எனது மகன் சாவுக்கு கவனாவே தான் காரணம் என்று தாயார் ரத்தினம்மா புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.















