திருமணமான மூன்று மாதத்தில் கிணற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் : நடந்த விபரீதம்!!

424

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அடுத்துள்ள சிறுங்கோழி, திடீர் நகரில் வசித்து வரும் குப்பன் என்ற கொத்தனார் மகள் ரேணுகா அவருக்கு வயது 25. ரேணுகாவுக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் மூன்று நாள் மட்டுமே கணவர் வீட்டில் இருந்த ரேணுகா அதன் பிறகு சிருங்கோழியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட விவசாயிகள் உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


அப்போதுதான் சடலமாக மீட்கப்பட்டவர் ரேணுகா என்பது தெரிய வந்தது. ரேணுகாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான மூன்று மாதத்தில் இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.