நடத்துனரை வெளுத்து வாங்கிய இளம்பெண் : வைரலாகும் வீடியோ!!

1339

சென்னை…

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 30 வயது அனிதார். இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 29ம் தேதி நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பேருந்தில் அனிதா ஓடிச்சென்று ஏறினார். ஓடும் பேருந்தில் ஏறியதால், நடத்துநர் செல்வக்குமார் அனிதாவை கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளம்பெண், கண்டக்டரை திட்டியபடியே பேருந்தில் பயணம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த நடத்துநர் செல்வக்குமார், பெரம்பூர் பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண்ணை பேருந்தை விட்டு கீழே இறங்கும்படி கூச்சலிட்டார்.


இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் திடீரென கையால் கண்டக்டர் செல்வக்குமாரை தாக்கினார். பதிலுக்கு அவரும் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் நடத்துநர் மற்றும் இளம்பெண் என 2 பேரிடமும் புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகர பேருந்து நடத்துநரை இளம்பெண் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.