ஆகான்ஷா..

நடிகை ஆசான்ஷா மரணத்தில் பல மர்பு முடிச்சுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இந்த மர்ம முடிச்சுகள் தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆகான்ஷா மரண வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு முதல்வருக்கும் இந்த விவகாரம் குறித்து கடிதம் சென்று இருக்கிறது.

போஜ்புரி மொழி திரைப்படங்களில் நடித்து வந்த பிரபலமான நடிகை ஆகான்ஷா துபே. 25 வயதான இவர் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கி இருந்திருக்கிறார்.

இவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் கொண்ட ஹோட்டல் பணியாளர் அறைக்குச் சென்று பார்த்திருக்கிறார். மாற்று சாவி எடுத்துச் சென்று திறந்து பார்த்திருக்கிறார்.

அங்கே அறையில் இருந்த மின்விசிறியில் துணியால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி இருக்கிறார் ஆகான்ஷா துபே. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர், நிர்வாகத்திற்கு தகவல் சொல்ல, ஹோட்டல் நிர்வாகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நடிகை ஆகான்ஷா துபே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் . ஆஹான்சா துபே, நடிகரும் பாடகருமான சமர்சிங்கை காதலித்து வந்திருக்கிறார்.

காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகான்சாவே இதை உறுதிப்படுத்தி இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் ஹோட்டலில் மரணம் அடைந்ததாக வந்த தகவலை அடுத்து சக நடிகையான காஜல் ராகவா வாணி , கடவுள் இருக்கிறார்.

உன் உயிருக்கான விலையை நிச்சயம் கொடுக்க செய்வார். இன்று இல்லாவிட்டாலும் நாளை அது நடக்கும் . வாழ்ந்தபோது இல்லாத மகிழ்ச்சியை இப்போது நீ பெற்றிருப்பாய் என்று நம்புகிறேன். நீ எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதாவது உயிருடன் இருக்கும் போது அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் குறிப்பிடுகிறார். இதே போலவே ஆஹான்சாவின் தாயார் மது, சமர் சிங்குடன் ஆசான்ஷா மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். ஆனால் சமர்சிங் ஒரு பைசா கூட சம்பளமாக கொடுத்தது இல்லை.

சமர் சிம் கொடுக்க வேண்டியது மூன்று கோடி ரூபாய் இருக்கும். ஒரு ஆல்பத்திற்கு 70 ஆயிரம் வீதம் சமர் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பணம் கேட்கும் போது எல்லாம் சமர் அவளை அடித்து சித்திரவதை செய்து துன்புறுத்தி வந்தார்.

பிற கலைஞர்களுடன் பணியாற்ற நினைத்த போதெல்லாம் அவளை அடித்து துன்புறுத்தி வந்தார் சமர். இதனால் ஆகான்ஷா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஆகான்ஷா வயிற்றில் எந்தவித உணவோ ஆல்கஹாலோ இல்லை. இதனால் அவர் சம்பவத்தின் போது குடிபோதையில் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

அவரது வயிற்றில் இனம் தெரியாத 20 மில்லி லிட்டர் அளவிலான திரவம் இருந்திருக்கிறது .வயிற்றில் உள்ள மியூக்கஸ் சவ்வானது மூடி இருந்திருக்கிறது . ஆஹான்சாவின் மணிக்கட்டு பகுதியில் காயமும் இருந்திருக்கிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கை யில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இதனால் கருப்பு நிற ஆடம்பர காரில் ஆகான்சாவை அந்த ஓட்டலில் விட்டு சென்ற சந்திப் சிங் என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஹான்சாவின் வழக்கறிஞர் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

ஹோட்டல் அறையில் ஆகான்ஷா சிலரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லி அதற்கான ஆதாரங்களையும் சுட்டி காட்டி இருக்கிறார். அதனால் தான் அவசர அவசரமாக ஆக்கான்சாவின் உடல் தகனம் செய்யப்பட்டு இருக்கிறது .

தகனம் செய்யக்கூடாது என்று அவர் தாயார் கேட்டுக் கொண்டும் தகனம் நடந்திருக்கிறது . பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரும் முன்பாகவே யாருடைய கட்டாயத்தின் பேரிலோ ஆகாஷ் ஆகாஷ் அவர்களுடன் தகனம் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்த கடிதத்தில். இதனால் ஆகான்ஷா மரணத்தில் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர் .















