நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற… இறுதியில் நடந்த பரிதாபம்!!

493

சத்தீஸ்கரில்..

இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் பைக்கில் காதல் ஜோடி ஒன்று சில்மிஷம் செய்யும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் சம்பந்தப்பட்ட காதல் ஜோடியை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் விசாரித்ததில் இந்த பைக் ஒரு திருட்டு பைக் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து துர்க் எஸ்.பி அபிஷேக் பல்லவ் கூறும்போது, ஜாவேத் என்பவர் தனது காதலியுடன் சுற்றித் திரிவதற்கும்,


அவளைக் கவரவும் 1.5 லட்சம் பைக்கை ஒன்பதாயிரத்திற்கு வாங்கியுள்ளார். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த ஜோடியின் பின்னால் செல்லும் மற்றொரு வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது.

இதுபோன்று பொது இடங்களில் மக்களை அச்சறுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.