நடுரோட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டல்.. முன்னாள் காதலனை அசிங்கப்படுத்திய காதலி!!

467

ஒரு பெண்ணுக்காக நடுரோட்டில் இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்ட சம்பவம் பீகாரை அதிர வைத்திருக்கிறது. என் கூட வர உனக்கு என்ன தகுதியிருக்கு? என்று முன்னாள் காதலனைப் பார்த்து புது காதலனுடன் வாக்கிங் சென்ற இளம்பெண் கேட்டதில்,

ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்த முன்னாள் காதலனை, இன்னொரு இளைஞரும் துப்பாக்கி எடுத்து மிரட்டியது அதிர வைத்திருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னா நகரத்தில் மரைன் டிரைவில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் இளம் பெண் தனது காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தார்.

அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் முன்னாள் காதலர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த முன்னாள் காதலர், “உன்னை எனக்குத் தெரியும்,

நம்ம காதல் நடந்தது உண்மைதானே?” என கேட்க, அந்த பெண் “நீ யாரு? நம்ம இடையில் எதுவுமே நடக்கல” என மறுத்தார்.

இதனால் கோபமடைந்த முன்னாள் காதலர் “என்னை கோபப்படுத்தாதே என கத்தினார். அதற்கு அந்த பெண் “உனக்கு என்ன தகுதி, என்கூட இருக்க?” எனக் கேட்க, மோதல் மோசமான கட்டத்திற்குச் சென்றது.


உடனே கோபத்தில் அந்த முன்னாள் காதலர் தனது இடுப்பிலிருந்த ஒரு துப்பாக்கியை வெளியே எடுத்து காட்டினார்.

அதே நேரத்தில், அந்த பெண்ணுடன் வந்த காதலரின் குழுவில் ஒருவரும் மற்றொரு துப்பாக்கியை எடுத்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் தள்ளுமுள்ளாகவும், மிரட்டலாகவும் மாறிய நிலையில், அந்த பகுதி மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ளனர்.

தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிகள் உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.