நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபர்.. கணவன் செய்த பகீர் செயல்!!

739

சென்னையில்..

சென்னை பல்லவன் சாலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ராஜ்(23) இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள பாய்ஸ் கிளப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோதே இவரது பின்புறமாக வந்த மர்ம நபர் ஒருவர் இவரை அரிவாளால் வெட்டினார்.

இதில் பவுன்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவுல்ராஜின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி அவரது நண்பர் ஒருவரை கைது செய்து இருக்கிறது.

விசாரணையில், லோகேஷும், பவுல்ராஜின் நண்பர்கள் என தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான லோகேஷ் என்ற நண்பர் தான் அவரை வெட்டியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அந்த நபருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பவுல்ராஜ் அடிக்கடி இவர் வீட்டுக்கு சென்று வரும்போது அவருடைய மனைவியுடன் தவறான பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.


இதனை கைவிடுமாறு லோகேஷ் பவுல்ராஜை மிரட்டி இருக்கிறார். ஆனாலும் பவுல்ராஜ் அந்த உறவை கைவிடாததால் ஆத்திரத்தில் அவரை வெட்டி இருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அந்த நபரை கைது செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல நேற்று முன்தினம் தென்காசியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது அதில் மனித எலும்புக்கூடு இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எலும்புக் கூடாக இருந்த சடலத்தை மீட்டனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சார்ந்த மாரியப்பன் மகன் கல்லூரி மாணவனான மாடசாமி என்கின்ற மது காணாமல் போய் ஏழு மாதங்களானதாகக் கூறப்படுகிறது அவரது தந்தையார் ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, பேச்சியம்மாள் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரியா, அவரது தாய் மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரானான கல்லூரி மாணவன் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுவிற்கும், பிரியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர்கள் தனிமையில் இருந்த போது அதை வீடியோவாக எடுத்து வைத்து

பிரியாவை மிரட்டி மது அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் குடும்பத்தை விட்டு தன்னுடன் வராவிட்டால் வீடியோவை கணவரிடம் காட்டி விடுவேன் என்று மது மிரட்டியுள்ளார். இதனால் மதுவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தனது தாய், தம்பி உதவியோடு செப்டிக் டேங்கில் உடலைபோட்டுவிட்டு கோவைக்கு குடும்பத்தோடு சென்றும் தெரிவித்துள்ளது.