”நமக்காக விரதம் இருக்கிறேன்….” சிறையில் இருந்து காதலிக்கு உருக்கமான கடிதம் எழுதிய சுகேஷ்!!

397

காதலிக்கு..

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 200 கோடி பணத்தை மோசடியாக செய்ததாக புகாரளிக்கப்பட்டு, மீண்டும் கைதாகியுள்ளார். இவரும் பிரபல பாலிவுட் நடைகை ஜாக்குலின் பெர்னான்டாவும் காதலித்து வந்ததாகவும்,

சுகேஷின் மோசடியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். இதுத்தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்பதால் ஜாக்குலின், பாட்டியாலா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே காதலி ஜாக்குலினுக்கு சுகேஷ் கடிதம் எழுதியுள்ளார்.


அதில், ‘என் பெண் புலியே… பேபியே ஜாக்குலின்’ என தொடங்கியுள்ளார்.பேபி, தோஹா ஷோவில் நீ மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாய். உன்னை விட வேறு யாருமே அழகி அல்ல. மை பொம்மா! பேபி, நவராத்திரி நாளை முதல் தொடங்குகிறது.

இதனால் என் வாழ்வில் முதல் முறையாக உன் நல்வாழ்வுக்காக நான் 9 நாட்கள் விரதம் இருக்கிறேன். குறிப்பாக உன்னை சுற்றியிருக்கும் எதிர்மறை சக்திகள் விலக வேண்டும்.

உன்னையும் என்னையும் பார்த்து சிரித்தவர்கள் முகத்தை வெளியில் காட்ட முடியாது. உண்மை வெளியே வரும் நேரம் வந்துவிட்டது. அம்மனின் அருளால் எல்லாமே நமக்கு சாதகமாகவே அமையும். விரைவில் நீயும் நானும் ஒன்று சேர்ந்து வாழ்வோம்.

நம் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிற்காது. வெற்றி நமதே என ஜாக்குலினுக்கு சுகேஷ் உருகி உருகி காதல் கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதம் வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.