நள்ளிரவில் கள்ளக் காதலனுடன் சல்லாபம்… திடீரென வந்த கணவன்.. நடந்த விபரீத சம்பவம்!!

732

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகரில் ராஜாமணி (50), செல்வி (45) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான மெக்கானிக் ராமன் என்பவருக்கும், 45 வயதான செல்விக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதலை தெரிந்துகொண்ட ராஜாமணி, மனைவியை கண்டித்துள்ளார்.


இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டில் வயதுக்கு வந்த பெண் உள்ள போது தவறான உறவை கைவிடும் படி ராஜாமணி அறிவுரை கூறியுள்ளார்.

எனினும் செல்வி தொடர்ந்து இளைஞருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜாமணி, செல்வி மற்றும் மகள் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பேச்சு சத்தம் கேட்டதால் ராஜாமணி கண் விழித்து பார்த்தார். அப்போது, வீட்டினுள் ராமன், செல்வி இருவரும் தனிமையில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செல்வி, இனி உயிருடன் இருந்தால் நமக்கு சிக்கல் எனக் கூறி அங்கிருந்த கொடுவாளை எடுத்து ராஜாமணியின் தலை, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாமணி சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த ராமன் அங்கிருந்து ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நேராக தொப்பூர் காவல் நிலையம் சென்று உண்மையை கூறி சரணடைந்தார்.

இதனிடையே நள்ளிரவு 1 மணியளவில் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜாமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கெல்லாம் காரணமான ராமனை பிடித்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரையும் கைது செய்தனர்.

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமனை தருமபுரி கிளை சிறையிலும், செல்வியை சேலம் சிறையிலும் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.