சாகசம்…….

சாகசம் செய்து வீடியோ எடுக்கிறேன் என்று தான் நபர் ஒருவர் முகத்தை உடைத்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் உள்ளரங்க நீச்சல் குளத்தில் சூப்பர் டைவ் அடித்து சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அதை கவுண்டமணி காமெடி போல, தலை கீழாக தான் குதிப்பேன் என முயற்சித்துள்ளார்.

அந்த நபர் மேல் தளத்தில் இருந்து ஓடி வந்து டைவ் அடித்து நீச்சல் குளத்தில் பாய நினைத்தார். ஆனால், நடுவே நீச்சல் குளத்தை சுற்றி கண்ணாடி சுவர் எழுப்பப்பட்டுள்ளதை மறந்துவிட்டாரோ என்னவோ. ஓடி வந்து டைவ் அடித்தவர் நேராக கண்ணாடியில் போய் மோதினார்.

அவர் டைவ் அடித்த வேகத்தில் அவரது முகம் மோதி, கண்ணாடி உடைந்து, ஒருவழியாக நீச்சல் குளத்தில் விழுந்தார். நிச்சயம் முகத்தில் பலத்த அடிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. சாகசம் செய்ய நினைப்பவர்கள், முறையான பயிற்சியும், பாதுகாப்பான ஏற்பாடுகளுடன் ஈடுபடுதல் அவசியம்.
— 1000 WAYS TO DIE (@1000waystodle) October 17, 2020















