பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிச் சென்ற தாய்.. கடித்துக் குதறிய நாய்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

734

திருவள்ளூர்..

திருவள்ளூர் மாவட்டம் பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பாதி உடலைக் காணாத நிலையில், பச்சிளங்குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன.

இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, நாய்களை விரட்டியடித்தனர். பின்னர், இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சோழவரம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை அழுகிய நிலையிலும், முகம் அழுகி சிதைந்த நிலையிலும் காணப்பட்டது.


நாய்கள் கடித்துக் குதறியதில் குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது. குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தகாத முறையில் குழந்தை பிறந்ததால் தாய், அதனை வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள், சுற்றி உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள்,

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போன்ற இடங்களில் கடந்த 10 நாட்களில் முன்பாக குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். குழந்தையின் தாயைக் கண்டுப்பிடிக்கும் பணி குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.