படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்து ஒப்பனைக் கலைஞர் இளம்பெண் மரணம்!!

907

இளம்பெண்..

சமீபத்தில் சின்னத்திரை நடிகர் மாரிமுத்துவின் மரணம் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பு தளத்திலேயே ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்த வந்த இளம்பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கேனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’அருவி’ சீரியலில் ஒப்பனையாளராக பணிபுரிந்து வருபவர் ரமா பிரபா.

இந்தசீரியலில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஜோவிதாவுக்கு ஜோடியாக கார்த்திக் வாசுவும், அவருக்கு அம்மாவாக நடிகை அம்பிகாவும் நடித்து வருகின்றனர்.


‘அருவி’ சீரியலின் படப்பிடிப்பு சென்னையில் ஆலப்பாக்கத்தில் உள்ள தர்மராஜா கோயிலில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது ஒப்பனைப் பெண் ராமபிரபாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு இரவில் இருந்தே உடல்நிலை சரியில்லாத நிலையில், காலையில் ‘அருவி’ சீரியலின் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பட்டுக்கோட்டை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ராமபிரபாவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு இருந்ததால்,

மகனை சித்தியிடம் விட்டு விட்டு சென்னையில் தங்கிவேலை செய்து வந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஜோவிதா, அம்பிகா இருவரிடமும் ரமாபிரபா குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.