பட்டப்பகலில் காவல்நிலையம் அருகே இளம்பெண்ணை வெட்டி சாய்த்த இளைஞர்.. அதிர்ச்சிக் காரணம்!!

806

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் இன்று பிற்பகலில் மகளிர் காவல் நிலையம் அருகே கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு இளம்பெண் காவல்நிலையம் அருகே ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் அந்த இளம்பெண்ணை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார்.

வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கும் பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கத்தியால் அறுத்ததால் இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி விழுந்தார். பைக்கில் வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.


அத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அந்த இளம்பெண் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து முதல் கட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கொலை செய்யப்பட்ட இளம்பெண் கௌரி.

இவருக்கு வயது 20. பந்த்வாலின் விட்டலில் உள்ள அலிகே என்ற இடத்தில் வசித்து வருபவர். இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் வேலை செய்து வந்துள்ளார். இன்று புத்தூர் மார்க்கெட்டுக்கு சென்ற கௌரி, மகளிர் காவல் நிலையம் வழியாக கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தான் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. கௌரியை கொலை செய்தவர் மணிநல்கூர் கிராமத்தில் வசித்து வரும் பத்மராஜா , இவர் ஜேசிபி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவரை சுற்றிவளைத்து பந்த்வாலுக்கு அருகே உள்ள மாவினகட்டே என்ற இடத்தில் போலீஸார் கைது செய்தனர். ஒரு தலைக்காதலால் கௌரியை அவர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தட்சிண கன்னடாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.