பல் தேய்ச்சிட்டு வந்து முத்தம் கொடு : மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!!

4

கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நடைபெற்றது. “பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம்” என்று தடுத்த மனைவியை, கணவன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தார்.

அவினாஷ் – தீபிகா தம்பதியருக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளார். காலை எழுந்ததும் குழந்தையை முத்தமிட முயன்ற அவினாஷை தீபிகா தடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அவினாஷ் தனது மனைவியை சரமாரியாக வெட்டி, ரத்த வெள்ளத்தில் தீபிகா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.