பள்ளி மாணவியை கரெக்ட் செய்து எஸ்கேப்பான 50 வயது ஆசிரியர்.. நெருக்கமான புகைப்படம் வைரல்!!

2800

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோண்டா மாவட்டத்தில் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 50 வயது இந்தி ஆசிரியர். இவரிடம் இந்தி படிக்க 17 வயது மாணவி வந்துள்ளார்.

அப்போது அவரிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.

வீட்டைவிட்டு ஓடிய மாணவி வீட்டில் இருந்த 30,000 ரூபாய் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மகளை காணவில்லை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக 3 மாதங்களாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஆசிரியர், மாணவியின் பெற்றோர் கிராம மக்களுக்கு அனுப்பினார். இதனால் அவமானமடைந்த மாணவியின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.