பள்ளியில் மாணவிக்கு தாலி கட்டும் மாணவன்.. அதிர்ச்சியில் பெற்றோர்!!

709

மாணவிக்கு..

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் வைத்து தாலி கட்டியுள்ளார்.

இதுகுறித்து மற்ற மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் முறையிட்டனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவர் மற்றும் மாணவியை கண்டித்தார். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன் தலைமையிலான கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பள்ளி வளாகத்தில் மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல கடந்தாண்டு கன்னியாகுமரி களியக்காவிளை அரசு பள்ளியில் மாணவன்

ஒருவர் மாணவிக்கு பள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டும் வீடியோ வெளியாகியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே பாணியில் ஓசூர் அரசு பள்ளியிலும் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.