பாம்புடன் கலெக்டர் அலுவலகம் வந்த தாய்…. கதறித் துடித்த மகள்கள்… நடந்தது என்ன?

727

நெல்லை..

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியில் முருகன் – சமரச செல்வி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார்.

தாய் சமரச செல்வியும், அவரது மகளும் இணைந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 5 அடி நீளம் கொண்ட இறந்த பாம்பு ஒன்றை கையில் ஏந்தியபடி வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் பாம்பை அவர்களிடமிருந்து மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமரச செல்வி, தமிழக அரசின் பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இலவச வீட்டிற்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை.


தொடர்ந்து, மின் இணைப்பு இல்லாததால் அவ்வப்போது பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் எங்களுடைய உயிருக்கே ஆபத்து உள்ளது. மின் இணைப்பு வழங்கப்படாததால் எனது மகளும் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

நேற்று எங்களுடைய வீட்டில் புகுந்த பாம்பை அடித்துக் கொன்று தான், இன்று காலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்து வந்துள்ளதாக கூறினார்.