உத்தர பிரதேச….

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஹத்ராஸை சேர்ந்த 6 வயது மரணமடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலிகர் நகரில் உள்ள இக்லாஸ் பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஹத்ராஸைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த ஆண்டு அவரது தாயார் இறந்த பிறகு இக்லாஸில் உள்ள தனது அத்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தனது உறவினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியில் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த சிறுமி செவ்வாய்க்கிழமை டெல்லி மருத்துவமனையில் இறந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் குற்றவாளிகளான காவல்துறையினரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட் குடும்பத்தினர் சிறுமியின் உடலை சதாபாத்-பல்தேவ் சாலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.எஸ்.பி அலிகார் ஜி முனிராஜ், இக்லாஸின் காவல்நிலைய அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளார்.
போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கவலையடைந்துள்ளதாக ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது.















