பிரியன்சு சிங்..

போஜ்புரி நடிகை பிரியன்சு சிங். இவர் தனது சக நடிகரான புனித் சிங் ராஜ்புத் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது குறித்து பிரியன்ஸ் ”சமூக வலைதளங்கள் மூலம் புனீத்துடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், தன்னைப் பயன்படுத்தி தான் அவர் சினிமாவில் நுழைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ’ஆரம்பத்தில் புனித் சிங் என்னிடம் மிகவும் இனிமையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டார். என் நம்பிக்கையை பெற்ற பிறகு என்னை திருமணம் செய்துக் கொள்வதாக உறுதி அளித்தார். நான் தனியாக இருந்தபோது என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.

போதையில் இருந்ததால் மறுநாள் காலையில், சுயநினைவு திரும்பியதும், இரவு நடந்ததை சொல்லி எச்சரிக்கை விடுத்தேன் . போலீசில் புகார் செய்வேன் எனக் கூறியதும் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு விரைவில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

“ஆனால் புனித் மீண்டும் மீண்டும் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் விரும்பாத விஷயங்களை என்னை கட்டாயப்படுத்தி செய்ய வைத்தார். தலைமுடியை இழுத்து அடித்து கொடுமைப்படுத்தினார்” எனக் கூறியுள்ளார். பிரியன்சுவின் இந்தப் பேட்டி போஜ்புரி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.















