பிரபல நடிகைக்கு விமானத்தில் பாலியல் துன்புறுத்தல்… கதறும் நடிகை!!

477

திவ்யப் பிரபா..

மலையாள திரையுலகில் பிரபல நடிகை திவ்யப் பிரபா. இவர் நேற்று அக்டோபர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட்டில் பயணம் செய்தார்.

அப்போது சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்ததுடன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் ‘என் அருகில் குடித்து விட்டு அமர்ந்திருந்த சகபயணி ஒருவர், எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல் விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அத்துடன் என்னை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார்.


இதுகுறித்து, நான் விமானப் பணிப்பெண்ணிடம் உடனடியாக புகார் அளித்தேன் அவர்கள் அவருடைய இருக்கையை மாற்றினர். விமான நிறுவனங்கள் விமானங்களில் பயண நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் .

அதே வேளையில், சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். திவ்யாவின் இந்த புகாருக்கு விரைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரம் குறிப்பிட்ட பயணிக்கு தண்டணை வழங்க வேண்டும் எனன திரையுலகைச் சேர்ந்தவர்கள் நடிகைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Divyaprabha (@divya_prabha__)