பிரித்தானியாவில் £50பில்லியன் பணத்தாள்கள் மாயமான மர்மம்: விழி பிதுங்கும் நிதித்துறை!!

453

பிரித்தானியா……

பிரித்தானியாவில் புழக்கத்தில் இருந்த சுமார் 50 பில்லியன் பவுண்டுகளுக்கான பணத்தாள்கள் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பணம் பரிவர்த்தனைகளுக்காகவோ அல்லது வீட்டு சேமிப்பிற்காகவோ பயன்பாட்டிலும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த பணமானது வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கலாம், பதிவு செய்யப்படாத உள்நாட்டு சேமிப்பாகவோ அல்லது சட்டவிரோத பொருளாதாரத்தில் பயன்பாட்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது.


ஆனால் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாயமான மொத்த தொகையில் ஒருபகுதி எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கொஞ்சம் தகவல் தெரியும் என குறிப்பிட்டுள்ளனர்.

2010-ல் முன்னெடுக்கப்பட்ட பத்து பரிவர்த்தனைகளில் ஆறில் குறித்த பணம் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அதேவேளை, 2019-ல் இந்த எண்ணிக்கையானது பத்தில் மூன்று என குறைந்துள்ளதாகவும் தேசிய தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.