பெண் கொலை வழக்கில் அதிரடி திருப்பம் சூப் கடைக்காரர் கைது : விசாரணையில் பகீர் தகவல்!!

564

கோவை….

கோவை சேரன்மாநகர் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த சர்க்கரவர்த்தி என்பவரது மனைவி ஜெகதீஸ்வரி (38) என்ற பெண்ணை கடந்த 28 ஆம் தேதி மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து,

அவர் அணிந்திருந்த சுமார் 5.5 பவுன் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றார். இது குறித்து பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக பீளமேடு பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கண்டறிந்தனர்.


அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட மோகன்ராஜ் கோவை ராமநாதபுரத்தில் தங்கி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வந்தது தெரியவந்தது.

இவர் பாலாஜி நகர் பகுதியில் குடியிருந்த போது ஜெகதீஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததுள்ளனர். இந்நிலையில் ஜெகதீஸ்வரி சில நாட்களாக வேறு சிலருடன் பேசி பழகுவது குறித்து மோகன்ராஜ் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று இரு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டு,

மெடிக்கல் கடையில் கையுறையை வாங்கிக் கொண்டு ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 5.5 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். மேலும் அந்த நகைகளை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கடையில் விற்பனை செய்துவிட்டு, யாரிடமும் மாட்டமாட்டோம் என எண்ணி இருந்துள்ளார்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மோகன்ராஜுக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. மேலும் அவர் மீது ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மறைத்து வைத்திருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கையுறை, விற்பனை செய்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.