பெண் போலீசுடன் கள்ளக்காதல் : இறுதியில் போலீஸ் எஸ்ஐ-க்கு நடந்த விபரீதம்!!

901

உத்தரபிரதேசத்தில்….

உத்தரபிரதேசத்தில் பெண் கான்ஸ்டபிளுடனான காதல் விவகாரம் அம்பலமானதால் ரவுடியை சுட்டுக் கொன்ற காவல் ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனூப் சிங் கடந்த 10ம் தேதி விஷம் குடித்தார்.

தொடர்ந்து, அவர் ரீஜென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இறந்தார். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட அனூப் சிங்கின் மனைவி பூனம் சிங் போலீசில் அளித்த புகாரில்,


“எனது கணவர் அனூப் சிங் ஃபசல்கஞ்சுக்கும், பெண் காவலருக்கும் தகாத உறவு இருந்து வந்தது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு எனது கணவரிடம் அந்த பெண் காவலர் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண் கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.