பேஸ்புக் பழக்கம்.. ஆசைவார்த்தை 16 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

980

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவருக்கும், கடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் ( 30) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அடிக்கடி போனில் இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி முருகவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஊருக்கு கடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது மகளை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.


அந்த புகாரில் தனது மகள் காணாமல் போகும்போது வீட்டில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ. 50,000 ரொக்கத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர் சிறுமியை பேஸ்புக் மூலம் காதலித்து கடத்தி சென்றதும், ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடலூருக்கு விரைந்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த முருகவேலையும் அவர் கடத்திச் சென்ற அந்த 16 வயது இளம்பெண்ணையும் போலீசார் மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.