மகளின் பையில் பிரக்னன்சி கிட் இருந்ததால் ஆத்திரம் : தந்தை செய்த கொடூரம்!!

655

உத்திரபிரதேசத்தில்..

பல ஆண்களுடன் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த நிலையில் மகளின் பையில் பிரக்னன்சி கிட் இருந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் கழுத்தை நெரித்துக் கொன்று ஆசிட் ஊற்றி கால்வாயில் வீசிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அலம்பாத் என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் நரேஷ். இவரின் மனைவி ஷோபா. இவர்களது 21 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கிராமத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. போலீசார் சென்று அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போது தான் அது காணாமல் போன நரேஷ்-ன் மகள் என்பது தெரிய வந்தது.


இதை அடுத்து போலீசார் நரேஷ் -ஷோபா தம்பதியிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்கள். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திய போது தான், எங்கள் மகளை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று திடுக்கிடும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.

கணவனும் மனைவியும் சேர்ந்து தான் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.  அதன் பின்னர் மகளின் உடலில் ஆசிட்டை ஊற்றி உடலில் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக

உடல் முழுவதும் ஆசிட்டை ஊற்றி கால்வாயில் தூக்கிப் போட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.இதற்கு நரேஷின் சகோதரர்கள் உதவி செய்தார்கள் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்கள் . தங்கள் மகள் பல வாலிபர்களுடன் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும்,

இதனால் பல வாலிபர்களுடன் தங்கள் மகளுக்கு தவறான பழக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு வந்த நிலையில் மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் பிரக்னன்சி கிட் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மகள் மீது சந்தேகப்பட்டு அடித்தோம்.

இப்படிப்பட்ட மகள் இருக்கக் கூடாது என்று கழுத்தை நெரித்து கொலை செய்து அதன் பின்னர்தான் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக உடல் முழுவதும் ஆசிட் ஊற்றி கிராமத்துக்கு வெளியே உள்ள கால்வாயில் தூக்கி வீசினோம் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள்.