மனைவியின் பேச்சைக்கேட்டு செல்போனை எடுக்க சென்ற கணவன்; கதவை அடைத்து மனைவி எடுத்த முடிவு..!

531

சுவேதா…………..

திருமணமாகி 2 நாளிலேயே புதுப்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரியில், வசித்து வருபவர் செல்வகுமார்(27). இவருக்கு விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரி மகள் சுவோதவுடன்(20) திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலயில், திருமணம் முடிந்த கையோடும், புதுப்பெண் தன் கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் தனது செல்போனை எடுத்து வரும்படி கேட்டுள்ளார்.

மனைவியின் பேச்சைக்கேட்டு செல்போனை எடுக்க சென்றபோது, சுவேதா, புதுவீட்டின் கதவை அடைத்துள்ளார். இதைக்கண்ட கணவன் ஓடி வந்து கதவை தட்டி திறக்க சொல்லியுள்ளார்.


ஆனால், கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வகுமார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் புடவை கொண்டு சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உடனே அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, திருமணமான 2-வது நாளில் மணப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.