மனைவியுடன் தகாத உறவு.. நண்பனின் கழுத்தையறுத்து ரத்தம் குடித்த கணவர் : நடுங்கிப்போன மக்கள்!!

825

கர்நாடகவில்..

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது நண்பர்கள் மரேஷ் மற்றும் ஜான். இந்நிலையில் விஜய் மனைவியுடன் மரேஷுக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த விஜய் கடந்த 19 ஆம் தேதி, தனது மற்றொரு நண்பரான ஜானுடன் சேர்ந்து மரேஷை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு தனது மனைவியுடனான கள்ளத் தொடர்பை விட்டுவிடும்படி கூறி மரேஷை தாக்கியுள்ளார் விஜய்.

அவரது நண்பரான ஜானும் மரேஷை விஜய்யுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். பின்னர் கத்தியால் மரேஷின் கழுத்தை அறுத்த விஜய், அவரை கீழே தள்ளி அவர் உயிரோடு இருக்கும் போதே அவரது ரத்தத்தை குடித்துள்ளார்.


விஜய் மரேஷின் ரத்தத்தை குடிப்பதை ஜான் தனது செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் வைரலாகி உள்ளது. இதனை பார்த்த கர்நாடக போலீசாரே கிறுகிறுத்து போய்விட்டார்கள். வீடியோவின் அடிப்படையில் நண்பரை தாக்கி ரத்தத்தை குடித்த விஜய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மரேஷ் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பரின் கழுத்தை அறுத்து துள்ள துடிக்க கணவர் ஒருவர் அவரது ரத்தத்தை குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்ததியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.