புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை தெற்கு சந்தை பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் 21 வயது உமா மகேஸ்வரி. தூய்மை பணியாளராக இருந்த மாரிமுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பிரச்சினையால் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து கருணை அடிப்படையில் மாரிமுத்துவின் இளைய மகளுக்கு மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இதையடுத்து குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள குருக்கள் பண்டாரத் தெருவில் வாடகை வீட்டில் தனலட்சுமியும் உமாவும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கரம்பக்குடி தாலுக்காவை 38 வயதான மற்றொரு மாரிமுத்துவுடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் இவர்களுக்குள் கள்ளக்காதலை உண்டாக்க இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அவ்வப்போது தனலட்சுமியுடன் உறவு கொள்ள வீட்டுக்கு வரும் மாரிமுத்துவுக்கு நாளடைவில் தனலட்சுமி மீதான கள்ளக்காதல் அவரது மகள் மீது காதலாக திரும்பியது.

இந்த காதலை உமாவிடம் மாரிமுத்து கூற அதற்கு அவரும் ஏற்றுக் கொண்டார். இதை எண்ணி தனலட்சுமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தன்னுடன் கள்ளக்காதல் உறவில் இருந்து கொண்டு தனது மகளையும் காதலிப்பதா என கோபமடைந்தார். இதையடுத்து இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.எனினும் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய உமா, மாரிமுத்துவை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து மயிலாடுதுறையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். திருமணமான புதிதில் உமாவுக்கு வாழ்க்கை சொர்க்கம் போல் இருந்தது. பிறகுதான் மாரிமுத்துவின் சுயரூபம் திருமணமான 4 மாதங்களில் தெரிந்தது. எதற்கெடுத்தாலும சந்தேக பார்வை, எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் எப்போதும் உமாவையே நோட்டமிடுவது. அவர் வேலைக்கு செல்லும் போது பின்னால் அவருக்கு தெரியாமல் செல்வது,

அலுவலகத்திற்கு உயரதிகாரிகளுக்கு உமா வணக்கம் வைத்தாலும் அதை அசிங்கமாக பேசுவது என மாரிமுத்து நாளாக நாளாக வெறிபிடித்தவர் போல் இருந்தார். அவ்வப்போது அலுவலகத்திற்கு சென்று உமாவை அடிப்பதும் அசிங்கமாக பேசுவதுமாக இருந்தார். மாரிமுத்துவின் டார்ச்சர் தாங்க முடியாததால் தனது தாயை தொடர்பு கொண்ட மகேஸ்வரி, தனது கணவன் சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும் தன் மீது எப்போது பார்த்தாலும் சந்தேகப்படுவதாகவும் ஏதாவது எதிர்த்து கேட்டால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உமாவின் தாய் தனது உறவினர்களை அழைத்து கொண்டு மகளின் வீட்டிற்கு சென்றார். மாரிமுத்துவிடம் இருந்து உமாவை பிரித்து தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார். இது மாரிமுத்துவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு 7 மணிக்கு காரில் சில நபர்களுடன் உமாவின் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது தாயுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த உமாவை வழிமறித்து கடத்திச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உமாவின் தாய் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்து ஒரு மாதமான நிலையில் இதுவரை தனது மகளை கண்டுபிடித்துத் தரவில்லை என்பதால் அச்சமடைந்த உமாவின் தாய் , நேற்றைய தினம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்போது கணவரை பிரிந்து உமா தனது தாய் வீட்டில் வசித்த போது மாரிமுத்து கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோவை போலீஸாரிடம் தாய் போட்டு காட்டினார். அதில் உன் உயிர் ஊஞ்சலாடுது, மரணம் நெருங்குது, நீ எத்தனை நாள் உயிரோடு இருக்க போறேனு எனக்கே தெரியலை. எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என அந்த ஆடியோவில் மிரட்டப்பட்டிருந்தார். தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.















