மருத்துவமனையில் படுத்துக் கொண்டே இன்ஸ்டா காதலிக்கு தாலி கட்டிய இளைஞர்!!

259

கோவை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் கமல்நாத் இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் திவ்யதர்ஷினி. இவர் அப்பகுதியில் உள்ள டி. கே.எம். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கமல் நாத்தும், திவ்யதர்ஷினியும் இன்ஸ்டா மூலம் 3 வருடமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கமல்நாத்துக்கு நவம்பர் 12ம் தேதி வாகன விபத்து ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கமல்நாத் கூறியதும் உடனடியாக நவம்பர் 25ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் கமல்நாத்தை பார்த்து நலம் விசாரிக்க பொள்ளாச்சிக்கு வந்தார். கமல்நாத் திவ்யதர்ஷினியிடம் உடனே நாம் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

கமல்நாத் காலில் அடிபட்டு இருந்த நிலையில் படுக்கையில் இருந்து கொண்டே திவ்யதர்ஷினி கழுத்தில் தாலி கட்டினார். இதன் பிறகு திவ்யதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இருவரின் பெற்றோரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். மருத்துவமனையில் படுத்துகொண்டே தாலி கட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.