மாணவியை காதலிப்பதாக கூறி அத்துமீறிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

508

சென்னை…

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ்(19), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியை காதலிப்பதாக ஜார்ஜ் கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.

இந்நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்கு வந்த ஜார்ஜ்ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பின்னர் அதை வெளியே சொல்லி விடுவேன் என்று கூறியே பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.

இச்சம்பவம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், கல்லூரி மாணவர் ஜார்ஜ் மீது போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தலைமறைவான ஜார்ஜை போலீசார் கைது செய்தனர்.