நீயா நானா……

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் நாட்டு மருத்துவத்தை பின்பற்றும் மாமியார்களும், ஆங்கில மருந்தை பின்பற்றும் மருமகள்களும் தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் நாட்டு மருத்துவராக இருக்கும் தாய் ஒருவர் தனது மகனை நாட்டு மருந்து கொடுத்து வளர்த்தும் வருடம் முழுவதும் உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கிறாராம்.
இதனை அரங்கத்தில் மருமகள் அவிழ்த்துவிட மாமியாரோ திருமணத்திற்கு பின்பு தான் இப்படி என்று அவரைக் குற்றம் சாட்ட ஒட்டுமொத்த அரங்கமே சிரிப்பை அடக்க முடியாமல் கொமடியில் மூழ்கியுள்ளது.















