மும்பை…

மும்பை மீரா ரோடு பகுதி கீதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் சரஸ்வதி வைத்யா என்ற 32 வயது பெண் மற்றும் மனோஜ் ரமேஷ் சனே என்ற 56 வயது நபரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு சரஸ்வதி வைத்யாவை அவரது பார்னரான மனோஜ் கொடூரமாக கொலை செய்தார்.

சரஸ்வதி வைத்யாவின் உடலை, எண்ண முடியாத அளவுக்கு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்து நாய்க்கு இரையாக போட்டும் மிக்ஸியில் அரைத்தும் அப்புறப்படுத்த முயன்றார். இதையடுத்து மனோஜை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதால் தனக்கும் சரஸ்வதி வைத்யாவுக்கும் இடையே எந்த பாலியல் உறவும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதனால் சரஸ்வதி தன் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்வார் என்றும் அவரை தனது மகளை போன்று பார்த்துக் கொண்டதாகவும் அவர் தான் முதலில் தன்னை காதலித்ததாகவும் பல்வேறு தகவல்களை முன்னுக்கு பின் முரணாக கூறினார். மேலும் சரஸ்வதி வைத்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை மறைக்கவே துண்டு துண்டாக வெட்டியதாகவும் கூறினார்.

அவரது போனை ஆய்வு செய்த போலீசார் சர்ச் ஹிஸ்டரியில் பாடியை எப்படி டிஸ்போஸ் செய்வது என மனோஜ் தேடியிருப்பதையும் அதில் கூறப்பட்டிருப்பதை போன்றே சரஸ்வதியின் உடலை மரம் வேட்டும் ரம்பத்தால் கூறு போட்டதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சரஸ்வதி வைத்யா கொலை தொடர்பாக மனோஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சரஸ்வதி வைத்யாவின் போனில் இருந்து போலீசாருக்கு முக்கிய துப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சரஸ்வதி, மனோஜ்ஜின் நடத்தை பிடிக்காமல் அவருடனான உறவை முடிக்க விரும்பியது வாட்ஸ் அப் சாட்டின் மூலம் தெரிய வந்துள்ளது. மே 26 மற்றும் 27 ஆம் தேதிகளில், சரஸ்வதி தனது மொபைல் போனில் இருந்து மனோஜ் சானேவுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் நீ என் நம்பிக்கையை உடைத்துவிட்டாய்… என்னை மிரட்டினாய், எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாய், அதனால் உன்னுடனான உறவை முடித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது மெஸேஜ்ஜில் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தான் போலீசார் தற்போது இந்த கொடூர கொலை வழக்கில் ஒரு பெரிய துப்பாக பார்க்கின்றனர். இந்த மெஸேஜை அனுப்பிய ஒரு வாரம் கழித்து சரஸ்வதி வைத்யா உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் மே 26 ஆம் தேதி மற்றொரு பெணணுடன் மனோஜ் நெருக்கமாக இருந்ததையும் சரஸ்வதி கண்டுபிடித்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையேயான பிரச்சனை அதிகமானதும் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சரஸ்வதியின் இந்த வாட்ஸ்அப் சாட்டுகளை பார்த்த பிறகு, பல விஷயங்கள் தெளிவாகத் தெரிகிறது என்று கூறியுள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மனோஜின் குணம் சரியில்லை என்பதும் சரஸ்வதிக்கு அவருடன் வாழ விருப்பம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்..
















