ரூம் போட்ட காதலர்கள்.. காதலியின் அருகில் படுத்து ஊழியர் சில்மிஷம்.. செல்போனில் சிக்கிய பகீர் வீடியோக்கள்!!

810

செங்கல்பட்டு..

கூவத்தூர் அருகில் உள்ள சொகுசு விடுதியில் காதல் ஜோடியினர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஊழியரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே உள்ள பரமன்கேனி பகுதியில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் வாரத்தின் இறுதி நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பலர் வந்து தங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இங்கு சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் 22 வயதுடைய காதலியுடன் வந்து தங்கியிருந்தார். இந்த சொகுசு விடுதியில் ஊழியரான சீக்கினாங்குப்பம் பகுதியை சோந்த சுபாஷ் ( 23) என்பவர் அறைகளை பராமரிக்கும் பொறுப்பை கவனித்து வந்தார்.


நேற்று முன்தினம் இரவு காதலன், காதலி இருவரும் விடுதியில் உள்ள அறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சுபாஷ், அந்த படுக்கை அறைக்குள் நைசாக புகுந்து இளம்பெண்ணின் அருகில் அவரது காதலன் போல் படுத்து கொண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

தனது காதலன் தன்னிடம் இதுமாதிரியான பாலியல் தொந்தரவில் ஈடுபட மாட்டாரே? என சந்தேகம் அடைந்த அந்த பெண். உடனே சுதாரித்து எழுந்து பார்த்த போது காதலன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கட்டிலுக்கு அடியில் சுபாஷ் பதுங்கி இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் காதல் ஜோடிஇருவரும் சேர்ந்து சுபாசை வெளியே இழுத்து வந்து தர்மஅடி கொடுத்தனர்.

பிறகு கூவத்தூர் போலீசாரிடம் சுபாசை போலீசார் கைது செய்தனர். காதல் ஜோடி தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். இதனால் சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீசார் சுபாஷின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்த போது அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத்தன.

சுபாஷ், அந்த பண்ணை வீட்டில் தங்கும் பெண்கள் குளிக்கும் போதும், உடைகள் மாற்றும்போதும் அதனை ரகசியமாக வீடியோ எடுத்து ரசித்த ஆபாச காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன.

இதற்கிடையில் சுபாஷ் தாக்கப்பட்ட தகவல் அறிந்து வந்த சீக்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சிலர், கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் கலாட்டா செய்தனர். பின்னர் ஊழியரை தாக்கியதாக சொகுசு விடுதியில் தங்கிய காதல்ஜோடி உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.