லிப்ட்டில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

492

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் வசித்து வரும் பள்ளி மாணவன் முகமது ஆசிப். இவர் தனியார் அச்சகத்தில் லிப்டில் ஏறி இறங்கி விளையாடி கொண்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாக திடீரென லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். தனியார் அச்சகத்தின் திறந்தவெளி லிப்ட்டில் இருந்து மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தான்.

தவறி விழுந்து படுகாயம் அடைந்த மாணவனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.