லெஸ்பியன் தொடர்பில் இருந்த தோழிக்கு நேர்ந்த விபரீதம் : நீதிமன்றம் சென்ற இளம்பெண்!!

732

கேரளா..

கேரள மாநிலம் மலப்புரம் கொண்டோட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவரும் ஹபீபா என்ற நெருங்கிய தோழிகள். இருவரும் 12ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தனர். அதன்பிறகு ஒன்றாகவே படித்து மிக நெருக்கமாக தோழிகளாக மாறினர். இதற்கும் மேலாக முதலில் நட்பாகத் தொடங்கிய இவர்களின் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ மனமில்லாமல் இருந்துள்ளனர். எனவே கணவன்- மனைவியாக காலம்முழுவதும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 27ஆம் தேதி, சுமையா – ஹபீபா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தம்பதிகளாக சேர்ந்து வாழ்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ஹபீபாவின் தந்தை தன் மகளைக் காணவில்லை என கொண்டோட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சுமையா, ஹபீபா இருவரும் மலப்புரம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகினர்.


அப்போது, தங்கள் இருவருக்கும் 18 வயது நிரம்பியதாகவும், மேஜர் என்பதால் எங்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் எனக் கோரினர்.

அதன்படி மாஜிஸ்திரேட்டும் சேர்ந்து வாழ அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் எர்ணாக்குளம் மாவட்டம் கோலஞ்சேரியில் ஒரு வீட்டில் கணவன்- மனைவியாக சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில், இளம்பெண் சுமையா முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி, ஹபீபாவை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டனர். நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

அவரது வீட்டினர் இனி மனதளவில் என் வாழ்க்கைத் துணையான ஹபீபாவுக்குத் தொல்லைக் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.

ஹபீபாவை மீட்க கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு உள்ளேன் என்றார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.