வரதட்சனை கேட்ட மருமகனை செருப்பால் அடித்து வெளுத்து வாங்கிய மாமனார்!!

474

வரதட்சனை..

மருமகனை செருப்பால் வெளுத்து வாங்கிய மாமனார் கல்யாணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.

அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மருமகன் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த மாமனார் மணமேடையில் அனைவர் முன்பும் செருப்பு அடித்து வெளுத்து வாங்கியுள்ளார்.

மேலும், அந்த மாமனார் அந்த மணமகனை தரதரவென இழுத்துச் சென்றார். தெருவில் மணமகன், மணமகள் கையைப் பிடித்தவாறு அழுதுக்கொண்டே வந்தார். இவரைப் பார்த்த விருந்தினர்களும், பொதுமக்களும் சிரித்தனர்.


தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வரதட்சனை கேட்ட மணமகனுக்கு தக்க பதிலடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ இது பார்ப்பதற்கு ஸ்கிரிட் மாதிரி இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.