வரதட்சனை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கொடூர கணவர்!!

452

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு, மனைவியை கயிறில் கட்டி கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து 25 நாட்களுக்குப்பின்னர் தான், தெரியவந்துள்ளது. இவர் இதுபோல் சித்ரவதை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போதுதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை கணவர் ராகேஷே தனது மொபைலில் வீடியோவாக எடுத்துள்ளார்.

புகாரையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இந்த வீடியோ ஆதாரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


நம்மிடம் எவ்வளவுதான் நாகரீகம் வளர்ந்து வந்தாலும், பெண்களை சித்ரவதைப்படுத்துவது, வரதட்சனை போன்ற கொடுமைகள் மூலம் பெண்களை துன்புறுத்துவது, ஆண் ஆதிக்கத்தின் மூலம் பெண்களை மிரட்டுவது, பெண்கள் மீது பாலியல் வன்முறைகளை நடத்துவது போன்ற கொடூரங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

பெண்களும், பெண்ணியலாளர்களும், மனித உரிமையாளர்கள், பெண் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பெண் உரிமை போராளிகளும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக போராடி வந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன.

வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.