கேரளா..

கேரள மாநிலம் மாளவாடி ஜங்ஷனை சேர்ந்தவர் 27 வயதான ரஜிதா மோல். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாடு சென்றதும் அவருடைய நண்பரான ரன்னி பகுதியை சேர்ந்த அதுல் சத்யாவுடன் ரஜிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.

இருவரும் லிவின் டுகெதரில் இருந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஜிதாவும் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். ரஜிதா வெளிநாட்டிற்கு செல்வது, அதுல் சத்யாவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து திரும்பி கேரளாவுக்கு வருமாறு அதுல் சத்யா, ரஜிதாவை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து ரஜிதாவும் ஊர் திரும்பியுள்ளார். இதில் இருந்துதான் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. அதுல் சத்யாவின் உறவை, ரஜிதா துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதுல் ரஜிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்தனபுரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ரஜிதாவை சந்தித்த அதுல், கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

மேலும் அப்போது ரஜிதாவின் அம்மாவுக்கு வீடியோ கால் செய்தும் அந்தக் காட்சியை காட்டி மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரது உறவும் ரொம்பவே மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ரஜிதாவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த அதுல், அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது ரஜிதாவை காப்பாற்ற வந்த அவரது பெற்றோரையும் வெட்டியுள்ளார் அதுல்.
















