ஈரோடு…

ஈரோடு சூலை ஈபிபி நகர் பிபி கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ் கருத்து வேறுபாடு ஏற்பட்டு புவனேஸ்வரியை விட்டு சுரேஷ் பிரிந்து சென்றுள்ளார். ஆனால் புவனேஸ்வரி அதே வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று புவனேஸ்வரியின் குழந்தைகள் இரண்டும் வெளியே வீட்டருகே விளையாடிக்கொண் டிருந்துள்ளனர்.

அப்போது புவனேஸ்வரி வீட்டின் அருகாமையிலுள்ள குடியிருப்பு வாசிகள் புவனேஸ்வரியை கூப்பிட சென்றுள்ளனர். ஆனால் புவனேஸ்வரி தனது படுக்கை அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு வாயில் ரத்தம் கொட்டி இறந்து கிடந்துள்ளார்.

பின்னர் அருகாமையில் உள்ளவர்கள். இச்சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் தடவியல் நிபுணர்கள் கொண்டு அடையாளங்களை சேகரித்தும், மோப்பநாய் உதவியுடன் குற்றவாளியை தேட முயன்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















