உத்தரப்பிரதேசத்தில்….

உத்தரப்பிரதேசத்தில் இறந்ததாக கருத்தப்பட்ட நபர் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளை துணியால் மூடப்பட்டு சாலையோரத்தில் கிடந்த நபரால் வீதியில் பல மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபரை சுற்றி கூட்டம் கூடியிருந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உயிரிழந்தவர் சடலம் என்று அருகில் சென்றுள்ளனர். ஆனால் அது உண்மை இல்லை. அங்கு இறந்ததாக கருத்தப்பட்ட நபர், சிறிது நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
A man sleeping on road side was mistaken as dead body caused panic in Ghaziabad…लोग चैन से सोने भी नहीं देते. ? pic.twitter.com/UPMbeK9Csr
— Saurabh Trivedi (@saurabh3vedi) September 8, 2020
தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த நபர் தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்தையும், போலீசாரையும் கண்டு குழப்பமடைந்தார். பின்னர் நபருக்கு பொலிஸார் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.















