
கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் பல உயிரினங்கள் வாழ்கின்றன.

கடந்த ஆண்டு இந்த பூங்காவில் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரு புலிகள் ஒன்றையொன்று ஆக்ரோஷமாக பாய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

அதில், வேலியின் ஒரு புறத்தில் ஒரு புலியும், மறுபுறத்தில் இன்னொரு புலியும் நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த இந்த வீடியோ வனத்துறையினரால் எடுக்கப்பட்டு பின்னர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

வெவ்வேறு இனங்களை சேர்ந்த இந்த புலிகள் சண்டையிட்டுக் கொண்ட இந்த சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்தது என்றாலும்,
If the human relationship in this world were as strong as this fence?
Wild tiger fights with a safari tiger at Bannerghatta, Karnataka. pic.twitter.com/gT5tCOX4Yk— Susanta Nanda IFS (@susantananda3) August 5, 2020
தற்போது இதனை வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.















