வேறொரு பெண்ணுடன் உறவு : வீடு புகுந்து அலறவிட்ட மனைவி!!

31657

தெலுங்கானா…..

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை சேர்ந்தவர் பானு பிரகாஷ். மருத்துவரான இவர் பிரியங்கா என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது பானு பிரகாஷுக்கு அதிக அளவில் வரதட்சணை கொடுத்துள்ளனர். மேலும், பிரியங்கா பெயரில் இருந்த இரண்டு வீடுகளையும் பானு பிரகாஷ் மீது எழுதி வைத்துள்ளனர்.

திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வந்த இவர்களுக்கு 7 மற்றும் 6 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், பானு பிரகாஷுக்கு தேவிகா என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்ட நிலையில் பிரியங்காவை கூடுதல் வரதட்சணை கேட்டு சண்டையிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவி, இரு குழந்தைகளை விட்டுவிட்டு பானு பிரகாஷ் குடும்ப உறவில் இருந்து வெளியேறியுள்ளார்.


இதுதொடர்பான வரதட்சணை மற்றும் குடும்ப சண்டை வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பானு பிரகாஷ் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

ஆனால், விவாகரத்து இன்னும் வழங்கப்படாத நிலையில், பானு பிரகாஷ் காதலி தேவிகாவை சட்ட விரோதமாக திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பிரியங்கா பானு பிரகாஷ் தங்கியிருந்த வீட்டிற்கு உறவினர்களுடன் சென்று கணவன் மற்றும் தேவிகா இருவரையும் சரமாரியாக தாக்கி போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இரண்டு வீடு, அதிகப்படியான வரதட்சணை என அனைத்தையும் கொடுத்ததும் இரண்டு பிள்ளைகளுடன் நிர்கதியாக நிற்கும் பிரியங்கா, கண்ணீர்மல்க பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.