இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாட ரத்து! பிசிசிஐ அறிவித்துள்ளது..

1023

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இலங்கையிலும், ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயிலும் சுற்றுப்பயணம் செய்து விளையாட ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

* ஆஸ்திரேலியாவில் 40,000 இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியங்களில் அடுத்த மாதம் முதல் 10,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நேற்று அறிவித்துள்ளதை தொடர்ந்து, ஆண்டு இறுதியில் நடக்க உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை ரசிகர்கள் நேரில் பார்க்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

* 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியலில் டாப் 10ல் இடம் பிடிப்பதே நமது இலக்கு என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.


* இங்கிலாந்து சென்று டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 29 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் வகாப் ரியாஸ், சோகைல் கான் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். யு-19 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஹைதர் அலி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.