ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதிவான் ஜனனி சசிகலா வீரதுங்க நேற்று உத்தரவிட்டார்.
மதுஷங்கவும் அவருடைய நண்பரும் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.